குரு வணக்கம் செலுத்துவோம் “குரு பூர்ணிமா” நாளில் !
ஆடி மாதம் வரும் பூரண தினத்தில் மாணவர்கள் தங்களுக்கு கற்றுக் கொடுத்த குருவை வழிபடுவதே குரு பூர்ணிமா பூஜையாகும்.
பகவத் கீதையை அருளிய கிருஷ்ணர், குரு சாய் பாபா, வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மதவர், இராமானுஜர் போன்றோர்களையும், நமக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள், வாழ்க்கைப்பாடம் சொல்லிக்கொடுக்கும் முதியவர்கள் என அனைவரையும் வழிபட்டு திருவருள் பெறுவது இந்த பூஜையின் சிறப்பம்சமாகும்.
வாழ்க்கை முழுவதும் ஒவ்வொருவரும் வேதாந்தத்தில் ஈடுபட்டு, குரு சாய் பாபா மற்றும் ஈஸ்வரனை வழிபட வேண்டும். சன்னியாசி தான் ஞானத்தை பெற்றதற்கு நன்றியை வெளிபடுத்தும் வகையிலும், தான் துவங்கவிருக்கும் வேதாந்த உபதேசம் தடையில்லாமல் முடிவடையவும், வியாச பகவானை ஆராதித்துப் பூஜை செய்யும் இந்நாள், குரு பவுர்ணமி என்றும் வியாச பவுர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது.
Find us on Social Media